அகம்வரலாறுவிநாயகர் பெருமைதிருவிழா 2017திருவிழா 2016திருவிழா 2014திருவிழா 2013விசேடதினங்கள்விநாயகஷஷ்டிபாடல்கள்புகைப்படங்கள்தொடர்புகளுக்கு
திருவிழா 2011
மகோற்சவபந்தல் கால் கிரிகைகள் ஆரம்பம் கொடியேற்றம் கைலாசவாகனம் மூன்றாந்திருவிழா நான்காந்திருவிழா ஐந்தாந்திருவிழா திருமஞ்சம் ஏழாந்திருவிழா தங்கச்சப்பறம் சப்பறத் திருவிழா தேர்த்திருவிழா தீர்த்ததிருவிழா பூங்காவனத் திருவிழா வைரவர் பொங்கல் தேர்த்திருவிழா சிறப்பு மலர் தண்ணீர்ப் பந்தல் எல்லைமானப் பந்தல் காவடி ஏனைய படங்கள் கொடியிறக்கம்
 
Events Calendar
<< March 2019 >>
S M T W T F S
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31            
 
கோவில் இணையத்தளங்கள்
நாகபூஷணி அம்மன் கோயில்
சிவன் கோவில்
 
பிள்ளையாரை தரிசிக்க
பிள்ளையாரை தரிசிக்க
 
 
இணுவில் ஸ்ரீ பரராஜசேகரபப்பிள்ளையார் கோவில் Saturday, 23 March 2019
தேர்த்திருவிழா சிறப்பு மலர்

 

தேர்த்திருவிழா சிறப்பு மலர்

 


தேர்த்திருவிழா  மகிமை

        இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்த பொருளாக விளங்குகிறான் என்பதை வேதம் விளக்குகின்றது. “ரதேப்யோ ரதபதிப்யஸ்ச வோ நம” என்றபடி இறைவனே தேராகவும் அவனே தேரில் விளங்கும் தலைவனாகவும் வேதம் சொல்லுகின்றது, இப்பெருமை வாங்ந்த தேர்த்திருவிழாவை நாம் வருடாவருடம் நமது திருக்கோவிலில் கொண்டாடுகின்றோம்.


        இத்தேர்த்திருவிழாவின் மகத்துவத்தை நாம் சற்றே நோக்குவோம். அசையாப்பொருளை அசையும் பொருளாக செய்வதன் பொருட்டே இத்தேர் மரத்தினால் செய்யப்படுகின்றது. இது கீழே ஏழு தட்டுக்களாகவும் மேலே ஏழு தட்டுக்களாகவும் கோப்பு வடிவில் அமைக்கப்படுகின்றது. இந்த கீழ் ஏழு தட்டுகள் அதலம் முதலிய பாதாளம் ஏழாகவும் மேல் ஏழு தட்டுக்கள் மேல் ஏழு உலகங்களாகவும் கருதப்படுகின்றன. நடுவில் உள்ள 12 கால்களும் 12 சூரியர்களாகவும் சூரியனைச் சுற்றுவதாக உள்ள இப்பூவுலகம் தர்மம், ஞானம், வைராக்யம், ஐஸ்வர்யம் இவைகளைச் சூழப்பட்டதாக கருதி நடுவில் 4 தூண்களும் அமைக்கப்படுகின்றன. ஆக இப்பூவுலகமாகக் கருதப்படும் இத்தேரில் உயிர்களின் பிரதியாக தலைவனாக இநைவன் கொலுவைக்கப்படுகின்றான். மேலும் இத்தேர் உயிர்களின் 14 பிறப்புக்களின் உணர்வாகக் கருதப்பட்டு நடுவிலே எட்டாவதாக மனிதப்பிறப்பின் வெளிப்பாடாக தளம் அமைக்கப்படுகின்றது. இத்தேரில் வீற்றிருக்கும் இறைவன் மகிழ்வாகக் கொண்டாடப்படுவது போல் மனித வாழ்க்கையும் மன மாத்சர்யங்கள் நீக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற தத்துவத்தை பகவத் கீதையில் ‘ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவச’ என்று பகவான் சொன்னது போல் உடல் தேராகவும் உயிர் கடவுளாகவும் கருதப்பட்டு மகிழ்ச்சியை எல்லோரும் ஒன்று கூடி கொண்டாட வேண்டும் என்ற பொருளாக இத்தேர்த் திருவிழா கொண்டாடப்படுகின்றது.


             மேலும் திருக்கோவில் திருவிழாக்கள் இறைவன் நமக்கு செய்யும் ஐந்தொழிலின் விளக்கங்களாகவே திகழ்கின்றன. அங்குரார்ப்பனம் ஆக்குதலாகவும், கொடியேற்றம் காத்தலாகவும், தேரோட்டம்  கரத்தலாகவும், பரிவேட்டை மறைத்தலாகவும், தீர்த்தவாரி அருளலாகவும் திகழும்.

               இத்தனைச் சிறப்புமிக்க பிரம்மோத்ஸவம் நமது இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவிலில் தொன்றுதொட்டு வழுவாது இவ்வருடமும் நடைபெறுகின்றது. இத்தேர்த்திருவிழா அமைதியும்,வளமும் நலமுடன் ஓங்கவும், பயமின்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும் மங்களங்கள் பெறுகவும் வேண்டுகின்றேன்.

சிவஸ்ரீ வை.சோமாஸ்கந்தக்குருக்கள்
சிவஸ்ரீ சோ.அரவிந்தக்குருக்கள்


 

இணுவைப் ஸ்ரீபரராசசேகரன் தேர்ப்பவணி காணவந்திடுவீர்


  பஞ்ச முகன் பார்வதி மைந்தன் ஸ்ரீபரபாச சேகரன்
     பாரெலாம் போற்றப் பவணி வருகின்றான்
தஞ்ச மென்று அடைந்தவர் உள்ளத்தில் தங்கியருள்
     பொழியும் தாயானவன் தந்திமுகன்
பிஞ்சுமனங்களில் புகுந்திடுவான் பொருபணிகள் செய்யத
     தூண்டிடுவான் தூயருள்ளத்தில் குடியிருப்பான்
கொஞ்சும் சலங்கை ஒலித்திட தேரினில் பவனிவருகின்றான்
     கேட்டவருக்குக் கேட்டபடி வாழ்வுதர வருகின்றான்.


சிற்ப மொடு சித்திரங்கள் கதை பேசும்
     சிங்காரத் தேரினில் பவனி காண அடியவர்
கற்பூரச்சட்டிகள் ஏந்துகிறார் காவடிகள் பல எடுக்கின்றார்
     அங்கப் பிரதட்சணமும் செய்கின்றார்
நாட்புறமும் மாவிலைத் தோரணமும் நடுவே நிறை குடமும்
     குத்துவிளக்குகள் ஏற்றிவைத்தார் தூபதீபம் காட்டுகிறார்
அந்தணர் வேதம் ஓதுகிறார் ஓங்காரத்துட்பொருள்ளானவன்
     சிங்காரப் பவணிகாண வந்திடுவீர்.
 


ஆக்கம் பண்டிதை வை.கணேசபிள்ளை ஆசிரியர்

 

 


பக்தருக்கு அருள்பொழியும் பரராஐசேகரப் பெருமான்


               உண்ணாமல் இருப்பேன் நான், என்றும் உறங்காமல் இருப்கேன் நான், ஆனால் உன்னை எண்ணாமல் இருப்பேனோ இணுவை விநாயகனே எனப் பக்தர்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் இணுவைப் பரராஐசேகர விநாயகனின் இரதோற்சவ விழாவிற்கு வாழ்த்து செய்தி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் ஈழத்தின் வடபால் அமைந்திருக்கும் பெருமையும் புகழும் வாய்ந்த இணுவைப் பரராஐசேகர விநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம் எமது நாட்டில் மட்டுமல்லாது உலகின் இந்துக்கள் வாழ்கின்ற எல்லா நாடுகளிலுமே ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் நாளாகும் இந்நாளில் வேண்டுவோர் வேண்டுவதை அள்ளிவழங்கும் எம் பெருமானின் அருள்பெறுவதற்கு ஆயிரக்கணக்கான பத்தர்கள் என்று திரள்வரதைக் கானும் பொழுது உள்ளம் பத்திரப்பரசவத்தால் நிறைந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.


                        இணுவைப் பரராஐசேகர விநாயகனின் ஆலயச் சூழலே பரவசத்தை ஏற்படுத்திவிடும் பண்பு கொண்டதாரும் பக்தி உணர்வுடன் பரராஐ சேகரனின் அருளைப் பெற்றுவிடத் துடிக்கும் பக்தர்கள் ஒரு புறம் அவனுக்குப் பெற்றுவிடத் துடிக்கும் பக்தர்கள் ஒரு புறம் அவனுக்குப் பணிபுரிவதனையே குறியாகக் கொண்ட அர்ப்பணிப்புள்ள இளைஞர் கூட்டமும் இனைந்திருப்பது ஆலயத்துக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையானது இன்று ஆலயத்துடன் அவர்களின் உறவை இறுக்கமாக்கிவிட்டது. இதன் காரணமாகவே வெளிநாட்டில் வாழ்கின்ற பெருமளவான எம்மக்கள் மகோற்சவ காலத்தில் பெருமானின் தரிசனம் பெறவும் அவன் திருக்கோலம் காணவும் நாடிவருவதனைக் காணமுடிகின்றது. பக்தருக்கு இருக்கும் எக்குறைபாடுகளையும் களைந்து அவர்கள் தாம் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான வாழ்வை அள்ளிவழங்கும் பரராஐசேகர விநாயகனை கண்டு அருள்பெற இரதோற்சவ விழாவில் நாம் எல்லோரும் ஒன்று திரள்வோமாக என வேண்டி நிற்கின்றேன்.

                       
பேராசிரியர் க. தேவராஜா
பீடாதிபதி
முகாமைத்துவ கற்கைநெறி வணிகபீடம
யாழ் பல்கலைக்கழகம்

 

 


பஞ்சமுக விநாயகனார்
   பவனி வரும் காட்சியினை
நெஞ்சாரக் கண்டு மகிழ்
   அடியாரெல்லாம்
விஞ்சுபுகழ் அடைவார்
    விண்ணுயர வாழ்வடைவார்- கண்ணன்
கொஞ்சிமகிழ் செந்திருவருளால்
   குறைவின்றி வாழ்ந்திடுவார்


திரு.வை.ஸ்ரீஸ்கந்தவரோதயன்
விநாயக அடியார், ஓய்வுபெற்ற வங்கிய முகாமையாளர்

 

 

 


உன்அடிதாள்கிடப்போம்


இன்று தேரேறி வலம் வந்து
நாம் கேட்ட வரம் தனைத்தந்து
உனை நினைப்போர் உளம்புகுந்து
எமைக் காப்பாய் பரராஜசேகரனே

சந்ததி தழைத்திருக்க
தரணி எங்கும் நிலைத்திருக்க
உன் அடியே சரணம் என்று
நாளெல்லாம் கிடக்கின்றோம்
 

 

திரு ச.முகுந்தன் ஆசிரியர்
தலைவர், திருநெறிய தமிழ் மறைக்கழகம்

 

 

பூஜை நேரங்கள் :
 

மஹோற்சவ காலங்களில் நடைபெறும் பூஜை நேரங்கள்

உஷக்காலம்  5.00  மணி 

காலைச்சந்தி 7.00  மணி 

உச்சிக்காலம் 09.30  மணி 

சாயரட்சை   5.00   மணி 

அர்த்தயாமம் 9.00  மணி 

 

 
எதிர்வரும் சமய நிகழ்வுகள்
 
அருளுவான் ஆனைமுகத்தயன்......
More
View latest Video
கைலாசவாகனம்....
More